காற்றுள்ள வரை வாழும் காவியம் மேஜர் சிட்டு

July 31st, 2014 No comments

1011576_415011448608492_575841641_n

இயற்பெயர் – சிற்றம்பலம் அன்னலிங்கம்
பிறந்த இடம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை
வீரனாய் – 04.11.1971 – வித்தாய் – 01.08.1997.

கடலும் கடல்சார்ந்த அழகையும் கொண்ட உடுத்துறைக் கிராமத்தில் 04.11.1971 அன்று சிற்றம்பலம் தம்பதிகளின் கடைசி மகனாக வந்துதித்தான் அன்னலிங்கம். 9வது குழந்தையாக 5அண்ணன்களுக்கும் 3அக்காக்களுக்கும் கடைக்குட்டியாக வீட்டின் செல்லப் பிள்ளையாகப் பிறந்தவன்.

பெருமையோடு அவனை எல்லோரும் கொண்டாடிக் கொள்ளும் அளவுக்கு அவனது குழந்தைக்காலம் வித்தியாசமானது. 12வயதில் புலிவீரனாக தடியால் துப்பாக்கியை வடிவமைத்து விளையாட்டுக் காட்டிய பிள்ளையவன்.

ஆரம்பக்கல்வியை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் கற்றவன் க.போ.த.சாதாரண தரத்திற்கு வந்த போது தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியின் மாணவனாகினான். அவன் சாதிக்கப் பிறந்த பிள்ளையாகவே அம்மாவின் கனவை நிறைத்த கடைக்குட்டி. எதிர்காலத்தில் ஒரு அறிஞனாகவே அம்மாவின் மனசில் எழுந்த கோட்டையின் இராசகுமாரன் அவன். Read more…

வீரவேங்கையே சிட்டு விடியலின் ராகமே

November 4th, 2013 No comments

04.11.2013 சிட்டுவின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவுப்பாடல்.

மேஜர் சிட்டு பிறந்த வீடு

November 4th, 2013 No comments

veedu

ஒரு விருட்சம் வித்தாகிய போது

November 4th, 2013 No comments

friends1997

வெற்றி பெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்.

November 4th, 2013 No comments

சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மேஜர் சிட்டு பற்றி எழுதிய பகிர்வு:-

ts

 

சிட்டு தனது உறவுக்கு எழுதிய கடிதத்திலிருந்து

November 4th, 2013 No comments

சிட்டுவின் கையெழுத்து :-
chiddu signature

மனங்களில் என்றும் மறக்காத மேஜர் சிட்டு

November 4th, 2013 No comments

எந்நிலைவரிலும்
இலக்கை நோக்கியே எமது பதையில்
கால்கள் நடக்கும்
இன்னொரு முறை நான்
பிறக்கப் போவதுமில்லை.
‘இப்பிறப்பில் என் அன்னை மண்ணை மீட்கும் போரில்
என்றும் பின்வாங்கப் போவதுமில்லை’
என்ற இலட்சிய வேட்கையுடன்
வீர களமாடிய வேங்கை மாவீரர்களின் வரிசையில்
மேஜர் சிட்டுவும் ஒருவன்….! Read more…

குரலை மட்டும் உலவவிட்டு சிட்டு என்ற குயில் படுத்தது

November 4th, 2013 No comments

இந்த மண்ணின் மாவீரர்களை
தியாகங்களை ஏக்கங்களை
அவலங்களை துயரங்களை
சுமந்து கனத்த வரிகளுக்கு
மென்குரலால் உயிரூட்டி
காற்றேறி தேசமெங்கும்
உலவவிட்டவன் சிட்டு. Read more…

மறக்க முடியாத மேஜர் சிட்டு

November 4th, 2013 No comments

மாவீரான மறக்க முடியாதவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் மேஜர் சிட்டுவைப் பற்றி நன்றாக அறிந்த பலரில் நானும் ஒருவன் என்பதையிட்டு மிகவும் பெருமை கொள்கிறேன். நாங்கள் 1987, 88 களில் பள்ளி மாணவர்களாக இருந்த காலமது.

தெல்லிப்பளையில் இருந்த தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சமயம் சக மாணவனாக இருந்த சிட்டுவுடன் நட்பு ஆரம்பமானது. சிட்டுவை அவனது இயற் பெயரான அன்னலிங்கம் என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். Read more…

மேஜர் சிட்டு நினைவுப்பாடல்.

September 21st, 2013 No comments

கானமழை பொழிந்த குயில்
எங்கள் காதில் தேன் சுரந்த பொழில்
மானப்பா இசைத்த சிட்டு
நீ மறைந்து போனதெங்கே விட்டு…!
வசந்தம் இன்னும் வரவில்லையே குயிலே
நீ வானம் தேடிப் போனதென்ன குயிலே….!

மேஜர் சிட்டு நினைவுப்பாடல்.
வெளியீடு புலிகளின்குரல் 1997.

Categories: காணொளிகள் Tags: